இதனால் சினிமா என்பது பெரும்பாலானவர்களுக்கு ஒரு எட்டாத உலகமாகவே தென்பட்டும் வருகிறது. ஆனால் இன்றைய Digital உலகம் இந்த தூரத்தை உடைத்தெறியத் தொடங்கியுள்ளது. சினிமா என்பது இன்றைய சாதாரண மனிதனின் கைகளின் எல்லைக்குள் நெருங்கத் தொடங்கி விட்டது. இதற்கு முக்கிய உறுதுணையாக நிற்பது பெருகி வரும் Digital சாதனங்களும் அவற்றின் பாவனைகளுமாகும். இன்று Digital Film Making என்ற சொற்பதம் பிரபல்யமாகிக் கொண்டிருக்கிறது. நீங்கள் உங்கள் கைகளில் உள்ள கையடக்கத் தொலைபேசியைக் கொண்டு படப்பிடிப்பு செய்து அதே கையடக்கத் தொலைபேசியில் படத்தொகுப்பையும் செய்து அதே படத்தை நேரடியாக இணையத்தளத்துக்கு பதிவிறக்கம் செய்யமுடியும். இவ்வாறு பதிவிறக்கம் செய்யும் உங்கள் படைப்பை உலகில் உள்ள பல இலட்சக்கணக்கான மக்களும் பார்க்க முடியும்.
மேலும் உங்கள் காதலனுக்காக அல்லது காதலிக்காக நீங்கள் கவிதை எழுதியுள்ளீர்கள். உங்களது இரசணையை ஓவியமாக தீட்டியுள்ளீர்கள். உங்களது இனிமையான குரலை பாடல் மூலமாகவோ வசனங்களாகவோ ஒலிப்பதிவு செய்துள்ளீர்கள். Digital உலகம் உங்கள் காதலிக்காக அல்லது காதலனுக்காகவோ குறும்படத்தையோ இசைத் தொகுப்பையோ அல்லது உங்களிக் காதலின் பதிவாக ஒரு ஆவணப்படத்தையோ செய்ய வைக்கிறது. உங்களது பெற்றோரின் திருமண நாளுக்கான பரிசாக அவர்களின் கடந்த கால வாழ்க்கையை ஒரு ஆவணப்படமாக செய்து வழங்கலாம்.
Slumdog Millionair, Avatar போன்ற பிரபல்யமான, அதி வெற்றியடைந்த படங்கள் Digital முறையிலேயே படப்பிடிப்பு செய்யப்பட்டு படத்தொகுப்பு செய்யப்பட்டது. ஆதலால் Digital Film Making என்பது நீங்கள் பரந்த சினிமா உலகிற்கு செல்வதற்கு சாத்தியமாக உங்களுக்கு மிக அருகாமையில் உள்ள வாசலாகும்.
No comments:
Post a Comment