BroadShot

Saturday, February 6, 2010

DiGITAL FILM MAKING WORKSHOP - FREE

Digital Film Making தொடர்பான பயிற்சிப் பட்டறைக்கான நேர்முகத் தேர்வு

ScriptNetSL நிறுவனமானது திருகோணமலையில் Digital Film Making தொடர்பான ஒரு முழுமையான பயிற்சி தொடரை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த பயிற்சிப்பட்டறையானது Camera, Editing, Scriptwriting, Direction உட்பட Digital Film Making தொடர்பான அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். பயிற்சிப்பட்டறையில் கலந்து கொள்பவர்களுக்கான நேர்முகத் தேர்வு எதிர்வரும் 14.02.2010 அன்று காலை 9.00 தொடக்கம் நண்பகல் 12.30 வரை
இல 102 தபாற் கந்தோர் வீதி திருகோணமலையில் -Near UNHCR Office- நடத்தப்படவுள்ளது.
Digital Film Making தொடர்பாக ஆர்வமுள்ளவர்கள் இந்த நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.கலந்து கொள்வோர் 18 – 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
அவர்கள் திருகோணமலை யை வசிப்பிடமாகக் கொண்டிருக்க வேண்டும்.
நேர்முகத்தேர்விற்கு வருகை தரவுள்ளோர் முன்கூட்டியே தொலைபேசி மூலம் தங்களது நேர்முகத்தேர்வு நேரத்தை உறுதி செய்து கொள்ள முடியும்.
பயிற்சிப்பட்டறைக்கான பயிலுனர்கள் நேர்முகத்தேர்வின் மூலமே தெரிவு செய்யப்படுவர்.
மேலதிக தகவல்களுக்கு
0115624300
kriap@yahoo.com

DiGITAL FILM MAKING - A GATE

சினிமா என்பது பொதுவாக எல்லோராலும் கவரப்படும் ஒரு கலை வடிவம்.கலை வடிவங்களுக்குள் மனிதனை மிக அதிகமாக அதிசயிக்கவும் பிரமிக்கவும் வைக்ககூடிய கலை வடிவம் சினிமா.பலருக்குள் சிறுவயதில் சினிமா என்பது ஒரு புதிர்.அது ஒரு விநோத உலகம்.இந்த சிறு வயது உணர்விலிருந்து பலர் மீள்வதும் இல்லை. அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இது ஒரு புதிரும் விநோதமும்தான்.

இதனால் சினிமா என்பது பெரும்பாலானவர்களுக்கு ஒரு எட்டாத உலகமாகவே தென்பட்டும் வருகிறது. ஆனால் இன்றைய Digital உலகம் இந்த தூரத்தை உடைத்தெறியத் தொடங்கியுள்ளது. சினிமா என்பது இன்றைய சாதாரண மனிதனின் கைகளின் எல்லைக்குள் நெருங்கத் தொடங்கி விட்டது. இதற்கு முக்கிய உறுதுணையாக நிற்பது பெருகி வரும் Digital சாதனங்களும் அவற்றின் பாவனைகளுமாகும். இன்று Digital Film Making என்ற சொற்பதம் பிரபல்யமாகிக் கொண்டிருக்கிறது. நீங்கள் உங்கள் கைகளில் உள்ள கையடக்கத் தொலைபேசியைக் கொண்டு படப்பிடிப்பு செய்து அதே கையடக்கத் தொலைபேசியில் படத்தொகுப்பையும் செய்து அதே படத்தை நேரடியாக இணையத்தளத்துக்கு பதிவிறக்கம் செய்யமுடியும். இவ்வாறு பதிவிறக்கம் செய்யும் உங்கள் படைப்பை உலகில் உள்ள பல இலட்சக்கணக்கான மக்களும் பார்க்க முடியும்.

மேலும் உங்கள் காதலனுக்காக அல்லது காதலிக்காக நீங்கள் கவிதை எழுதியுள்ளீர்கள். உங்களது இரசணையை ஓவியமாக தீட்டியுள்ளீர்கள். உங்களது இனிமையான குரலை பாடல் மூலமாகவோ வசனங்களாகவோ ஒலிப்பதிவு செய்துள்ளீர்கள். Digital உலகம் உங்கள் காதலிக்காக அல்லது காதலனுக்காகவோ குறும்படத்தையோ இசைத் தொகுப்பையோ அல்லது உங்களிக் காதலின் பதிவாக ஒரு ஆவணப்படத்தையோ செய்ய வைக்கிறது. உங்களது பெற்றோரின் திருமண நாளுக்கான பரிசாக அவர்களின் கடந்த கால வாழ்க்கையை ஒரு ஆவணப்படமாக செய்து வழங்கலாம்.
Slumdog Millionair, Avatar போன்ற பிரபல்யமான, அதி வெற்றியடைந்த படங்கள் Digital முறையிலேயே படப்பிடிப்பு செய்யப்பட்டு படத்தொகுப்பு செய்யப்பட்டது. ஆதலால் Digital Film Making என்பது நீங்கள் பரந்த சினிமா உலகிற்கு செல்வதற்கு சாத்தியமாக உங்களுக்கு மிக அருகாமையில் உள்ள வாசலாகும்.